தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் குமாருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் வாக்குசேகரிப்பு

தென்காசி, ஏப்.9:  தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் தனுஷ்குமாருக்கு ஆதரவாக நகர திமுக சார்பில் கூட்டணி கட்சியினர் நேற்று சிந்தாமணி, மரைக்காயர், நடுப்பேட்டை, சுவாமி சன்னதி பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராஜா, விவசாய அணி சாமித்துரை, நகர நிர்வாகிகள் சொக்கலிங்கம், நடராஜன், சேக்பரீத், பால்ராஜ், கலைபால்துரை, பாலா, அப்துல்கனி, மதிமுக வெங்கடேஸ்வரன், காங்கிரஸ் காதர்மைதீன், சிபிஎம் மாரியப்பன், முஸ்லிம் லீக் முகம்மது அலி முன்னிலை வகித்தனர். நகர திமுக அணி அமைப்பாளர்கள் மோகன்ராஜ், ராம்ராஜ், ராம்துரை, கோபால்ராம், கிட்டு, அவுலியா, ராமையாபாண்டியன், சண்முகையா, சண்முகநாதன், செய்து அன்பியா, பைசல், முருகானந்தம், மைதீன்பிச்சை, முகம்மது, சிறுபான்மை பிரிவு இஞ்சிஇஸ்மாயில், ஜாகிர்உசேன், காசிம், சுரேஷ், கனி, சித்தார்த்தன், இஸ்மத், மணிமாறன், ராமநாதன், மஜீத், கட்டியப்பா, மீனாட்சிசுந்தரம், சாதிக், ஆறுமுகம், வெல்டிங் மாரியப்பன், செண்பகம், கவிதாமாரியப்பன், மதிமுக ரத்தினம், இசக்கி, கார்த்திக், பிச்சுமணி, வேம்பு, ரமேஷ், சிபிஎம் அருணாசலம், குருசாமி, முஸ்லிம் லீக் சேக்மைதீன், காங்கிரஸ் சுப்பிரமணியன், ஆறுமுகம், சலீம், மாடசாமிஜோதிடர், நாகூர்டெய்லர், வேலு, முகப்பிலாசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dhanush Kumar ,coalition parties ,DMK ,
× RELATED மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி...