×

5 பேர் மீது வழக்கு மாவூற்று வேலப்பர்கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வெள்ளை அடிக்கும் பணி தீவிரம்

ஆண்டிபட்டி, ஏப். 9: மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.14ல் துவங்க உள்ளதால் கோயிலில் வெள்ளை அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பிரசித்தி பெற்றதில் மாவூற்று வேலப்பர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இதனை முருகப் பெருமானின் எட்டாம் படை வீடு என்றும் அழைப்பர். இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவர்.இந்த திருவிழாவில் முளைப்பாரி, பால்குடம், காவடி, கரகாட்டம்,  சிலம்பாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், மொட்டை அடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் விரதம் இருந்து செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

திருவிழாவை முன்னிட்டு சித்திரை மாதத்தின் அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் முருகபெருமானுக்கு நடைபெறும். இத்திருவிழாவிற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இதனால் நான்கு வாரங்கள் நடைபெறும் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.
இந்நிலையில் திருவிழா வருகின்ற 14ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு கோயில் படிக்கட்டுகள், தடுப்பு சுவர்கள் போன்ற வளாக பகுதிகளில் வெள்ளையடிக்கும் பணிகள் இந்து அறநிலைய சமயத் துறையினர் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : persons ,festival ,Velapparko Chaiti ,
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்