×

வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்


தூத்துக்குடி, ஏப். 9: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. தெற்கு மாவட்டத் தலைவர் காமராசு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வெற்றிராஜன், மாநில இணைச்செயலாளர் பொன்ராஜ், வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் வாழ்த்திப் பேசினார்.

 இதையடுத்து மத்திய மாவட்டத் தலைவர் சோலையப்பராஜா, செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ஆனந்தபொன்ராஜ், கவுரவ ஆலோசகர் சோலை ஜெயராஜ், மாநகர தொகுதி செயலாளர் ஆனந்த்ராஜ், இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பட்டு, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜனார்தனன், ஜெயபாலன், பீட்டர், வேலுசாமி, பழனிவேல், விஜயகுமார், கருணாகரன், ஞானமணி ஆசீர்வாதம், மாவட்ட இணைச் செயலாளர்கள்  கோமதிசங்கர், ராமகிருஷ்ணன், செல்லத்துரை, மந்திரமூர்த்தி, காசிராஜன், பொன்ராஜ் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

Tags : meeting ,merchants ,union administrations ,
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...