×

மந்தை பகவதி அம்மன் கோயில் பங்குனி விழா

மேலூர், ஏப். 8: மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் உள்ள மந்தை பகவதி அம்மன் கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கொட்டாம்பட்டியில்  மந்தை பகவதி அம்மன் கோயில் மற்றும் சோலை ஆண்டவர் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் இக் கோயிலில் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று சிவகளத்தில் உள்ள பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஒரு கிமீ., தூரம் ஊர்வலமாக வந்து மந்தை பகவதி அம்மன் கோயிலை அடைந்தனர்.

பின்னர் கோயில் முன்பு கிடா வெட்டி பொங்கல் வைத்து பகத்தர்கள் வழிபாடு நடத்தினர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பக்தர்களின் பூத்தட்டு மற்றும் கரகம் எடுக்கப்பட்டது. கரகத்தை கோயில் பூசாரி ஊர்வலமாக எடுத்து சென்று அருகில் உள்ள வள்ளிகோன் குளத்தில் கரைத்ததை தொடர்ந்து விழா நிறைவுற்றது.

Tags : Mantai Bhagavathi Amman Temple Meeting ,
× RELATED மந்தை பகவதி அம்மன் கோயில் பங்குனி விழா