×

மாரத்தான் ஓட்டம்

ஊட்டி, ஏப். 8: ஊட்டியில் அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டி நேற்று நடந்தது. இதில், மாவட்ட எஸ்.பி., சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார். ஊட்டி ஒய்.டபுள்யு.சி.ஏ., வளாகத்தில் துவங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை ரயில்வே பாதுகாப்பு படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த 700க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதன்படி 15 கி.மீ., பிரிவில் 372 பேரும், 30 கி.மீ., பிரிவில் 238 பேரும், 60 கி.மீ., பிரிவில் 107 பேரும் பங்கேற்றனர். இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 6 வெளிநாட்டு போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இளம் வயதினர் முதல் 70 வயது வரையுள்ளவர்கள் இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டி உடல் நலனை பாதுகாக்கவும், மன தைரியத்தை ஏற்படுத்த நடத்தப்பட்டதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். நிறைவாக ஊட்டி தேயிலை பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு