×

நாகமங்கலத்தில் ஆவணங்களின்றி பைக்கில் எடுத்து சென்ற ரூ.75 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படையினர் அதிரடி

அரியலூர், ஏப். 8: நாகமங்கலத்தில் உரிய ஆவணங்களின்றி பைக்கில் எடுத்து சென்ற ரூ.75 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.அரியலூர் மாவட்டம், வி.கை£ட்டி அருகே நாகமங்கலத்தில்  தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகத்தை சோதனை செய்த போது   ரூ.75 ஆயிரம் ரொக்கம் உரிய ஆவணமின்றி  இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றதால் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தலையொட்டி கடந்த மாதம் 10ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு அலுவலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் அருகே இலரா தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அரியலூரை சேர்ந்த கருத்தான் படையாட்சி தெருவை சேர்ந்த ராமராஜன் (31) என்பவர் ஓட்டி வந்த பைக்கை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் ரூ.75 ஆயிரம் இருந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.75 ஆயிரத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சத்தியநாரயணனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். அதன்பின்னர் உதவி தேர்தல் அலுவலர் சத்தியநாரயணன், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Nagamangalam ,
× RELATED அரசு பள்ளி ஆண்டு விழா