×

ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில் நாளை கொடியேற்றம்

ராதாபுரம், ஏப். 8: ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் சமேத நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் சித்திரை திருவிழா நாளை (9ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்ரல் 17ம் தேதி தேரோட்ட வைபவம் நடக்கிறது
மஞ்சள் மகிமை நிறைந்தவள் என பக்தர்களால் போற்றபடும் ராதாபுரம் நித்யகலயாணி அம்பாள் உடனுறை வரகுண பாண்டீஸ்வரர் கோயிலில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (9ம்தேதி கொடியேற்றத்துடன்) துவங்கி 11 நாட்கள் சிறப்பாக நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் இரவு வீதியுலாவும் நடைபெறும். வரும் 12ம்தேதி இரவு அழகிய மணவாள பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலாவும்,  16 ம்தேதி நடராசர் பச்சை சாத்தியும் நடைபெறும். விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம்  இந்து வெள்ளாளர் சமுதாயம் சார்பில் வரும் 17ம் தேதி நடக்கிறது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்க்கின்றனர். மறுநாள் (18ம் தேதி) இரவு தெப்ப உற்சவம் சென்னை ரோகிணி நிறுவன அதிபர் பன்னீர் செல்வம், ராமவேல் செட்டியார் சார்பில் நடக்கிறது. 11ம் திருவிழா ராதாபுரம் வட்டார ஆதிதிராவிடர் சமுதாயம் சார்பில் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

Tags : Radhaapuram ,Vandana Pandiyeswarar Temple Chithram ,
× RELATED ராதாபுரம், நாங்குநேரி தொகுதிக்கு தாமிரபரணி குடிநீர்