×

வாலாஜா அருகே வாகன சோதனையில் மினிவேனில் எடுத்து சென்ற புடவை, ஜிப்பா பறிமுதல்

வாலாஜா, ஏப்.8: வாலாஜா அருகே நேற்று மினி வேனில் எடுத்துச்சென்ற புடவை, ஜிப்பாக்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை வாலாஜா டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையிலிருந்து வேலூர் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பண்டல் பண்டல்களாக புடவை மற்றும் ஜிப்பாகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, நடத்திய விசாரணையில் மேல்விஷாரத்திற்கு கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் புடவை மற்றும் ஜிப்பாக்களை பறிமுதல் செய்து வாலாஜா தாசில்தார் பூமாவிடம் ஒப்படைத்தனர்.

Tags : Zippa ,vehicle test ,Valaja ,
× RELATED சென்னைக்கு கார்களில் கடத்திய 3 டன் குட்கா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது