×

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 10ம்தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்

உடுமலை,ஏப்.7: உடுமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர்.பாலகிருஷ்ணன்  கூறி இருப்பதாவது:உடுமலை அரசு கலைக்கல்லூரியில் வரும் கல்வியாண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் 10ம்தேதி முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளன.
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், கணிதம்,வேதியியல், இயற்பியல், புள்ளியியல், தாவரவியல், கணினி அறிவியல், வணிகவியல் பிகாம், வணிகவியல் கணினி பயன்பாடு (பிகாம்சிஏ), வணிகவியல் மின் வணிகம் (பிகாம் இகாம்), வணிக நிர்வாகவியல் (பிபிஏ)  மொத்தம் 814 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதல் ஷிப்ட் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், இரண்டாம் ஷிப்ட் மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்படும்.

ஒரு மாணவர் ஒரு விண்ணப்பத்திலேயே தான் விரும்பும் பாட பிரிவுகளை குறிப்பிட்டால் போதுமானது. தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள் சாதி சான்றிதழை காண்பித்து இலவசமாக விண்ணப்பம் பெறலாம். மற்றவர்கள் ரூ.50 செலுத்த வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும். மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும். விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, மதிப்பெண் சான்று நகல், சாதி சான்று நகல் ஆகியவற்றை அரசு பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பம் (அட்டஸ்டடு) பெற்று ஏப்ரல் 22ம் தேதி காலை 11 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் மே 6 மாலை 3 மணி.

தர வரிசைப்பட்டியல் மே 15ம் தேதி கல்லூரி தகவல் பலகையில் காலை 11.30 மணிக்கு ஒட்டப்படும். சிறப்பு ஒதுக்கீடுதாரர்களுக்கு மே 20ம் தேதி காலை 9.30 மணியளவிலும், தொடர்ந்து தர வரிசை 1 முதல் 300 வரையிலும், 21ம் தேதி தர வரிசை 301 முதல் 800 வரையிலும், 22ம்தேதி அறிவியல் பாட தர வரிசை 01 முதல் 600 வரையிலும், 23ம்தேதி 601 முதல் 800 வரை உள்ளவர்களுக்கும் நடைபெறும். அன்று காலை தமிழ் இலக்கியத்துக்கும், பிற்பகல் ஆங்கில இலக்கியத்துக்கும் தரவரிசை 01 முதல் 900 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government Arts College ,Uthumalai ,
× RELATED உரிய ஏற்பாடுகள் செய்யாததால் கடலூரில்...