×

வாக்காளர் விழிப்புணர்வ மினி மாரத்தான்

பந்தலூர், ஏப். 7:   பந்தலூரில் வருவாய் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. போட்டியை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி பந்தலூர் பஜார் கிராம நிர்வாக அலுவலகம் அருகே துவக்கி வைத்தார். தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடேசன் முன்னிலை வகித்தார். இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் 100% வாக்களிக்க வேண்டும். நோட்டு வாங்காமல், ஓட்டு போடனும் என்ற வாசகத்துடன் மினி மாரத்தான் ஓட்டம் பஜார் வழியாக சென்று மீண்டும் கிராம நிர்வாக அலுவலகத்தை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில் ஆர்.ஐ.காமு மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Voter Awareness Mini Marathon ,
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ