×

ஊட்டி நகர திமுக.,வினர் ஆ.ராசாவிற்கு வாக்கு சேகரிப்பு

ஊட்டி, ஏப். 7:  நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக., வேட்பாளர் ராசா வெற்றிப் பெற வீதி வீதியாக சென்று ஊட்டி நகர திமுக.,வினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் நேற்று வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட பொருளாளர் நாசர்அலி, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்ேகாவன், முஸ்தபா, நகர துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தலைமை கழக பேச்சாளர் ரம்ஜான்பேகம் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, திமுக.,வின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

அரங்க ஆறுமுகம், சசிகுமார், ராஜா, ரவி, கார்டன் கிருஷ்ணன், ஜெயகோபி, ரவீந்திரன், மஞ்சுகுமார், கமலகண்ணன், சம்பத், சீனிவாசன், ஈசா, விஜயகுமார், வீராசாமி, ஜோகி, ரமேஷ், பாலு, அசரப்அலி, அன்வர்கான், மகளிர் அணி லூவிசா, டெய்சி, எமில்டா, சுசிலா, கண்ணகி, லலிதா, வனிதா, விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூடலூர் ஒன்றிய திமுக., மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து எம்.எல்.ஏ., மு.திராவிடமணி, ஒன்றிய செயலாளர் அ.லியாக்கத் அலி, திமுக., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் தேவர் சோலை பஜாரில் வாக்கு சேகரித்தனர்.

Tags : Ooty City DMK. ,Vannar A Raja ,
× RELATED ஊட்டி நகர திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம்