×

கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: கன மழை பெய்கிற காலங்களில் ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்வது வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால், சமீபகாலமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை சேமிக்க கிடங்கு வசதி இல்லாத காரணத்தால் நெல் மழையில் நனைந்து விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். எனவே, விவசாயிகளிடமிருந்து ஈரப்பதமுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தமிழகத்தில் கனமழையால் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளன. போர்க்கால அடிப்படையில் விவசாயிகளின் பாதிப்பை வருவாய்த்துறை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் மூலம் மதிப்பீடு செய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.   …

The post கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : K. S.S. Analakiri ,Chennai ,Tamil Nadu Congress Party ,K.K. S.S. ,Aalakiri ,Dinakaran ,
× RELATED பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும்...