×

கூலித்தொழிலாளி மர்மச்சாவில் திருப்பம் மதுவிருந்து தகராறில் கொன்றது அம்பலம்: மாணவன் கைது; 3 பேரிடம் விசாரணை

ஆவடி, ஏப். 5: ஆவடி, சேக்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மகேஷ் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, மது விருந்து தகராறில் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக, ஐடிஐ மாணவனை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த சேக்காடு, ரெட்டி தெருவை சேர்ந்தவர் மகேஷ் (27). கூலி தொழிலாளி. கடந்த 25ம் தேதி மதியம் வெளியே சென்ற மகேஷ் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. புகாரின்பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

இந்நிலையில் 29ம் தேதி ஆவடி, விஜிஎன் நகரில் அழுகிய நிலையில் மகேஷ் சடலத்தை போலீசார் மீட்டனர். இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஆவடி, காமராஜர் நகரை சார்ந்த ஐடிஐ மாணவன் நூர் அமீன் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நூர் அமீனை பூந்தமல்லி நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை  பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் கூறியதாவது: கடந்த 25ம் தேதி மகேஷின் நண்பர் சாம் சித்திரவேல் ஆவடி, விஜிஎன் நகர் அருகில் உள்ள ஒரு ஷெட்டில் மது விருந்து கொடுத்துள்ளார். இதில் மகேஷ், மாணவன் நூர் அமீன் கலந்துகொண்டனர். அப்போது மகேஷ் செல்போனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார். இதை நூர்அமீன் எட்டிப்பார்த்துள்ளார். அப்போது மகேஷ், ‘‘ஏன் எனது செல்போனை பார்கிறாய்?’’ என கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நூர்அமீன் ஆத்திரமடைந்து  மகேஷை ஷெட்டின் மேல் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்து மகேஷ் தலையில் உள்காயம் ஏற்பட்டு இறந்துள்ளார். இவ்வாறு தெரியவந்தது.

Tags : Kulithakolai Marmacha ,student ,Investigation ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...