லாரி மோதி வாலிபர் பலி

கீழக்கரை, ஏப்.5: ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை சேர்ந்தவர்கள் உமா செல்வம் மகன் அரியசெல்வம் (19), எலுவராஜன் மகன் சம்பத் (19), நாகூர்கனி மகன் நவபிரியன்(19). மூவரும் ஒரே டூவீலரில் கீழக்கரை பாரதிநகர் கடற்கரைக்கு சென்றுவிட்டு திரும்பினர். அப்போது டூவீலர் மீது லாரி மோதி மூன்று பேரும் பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அரிய செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>