×

தென்காசி அமமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் அதிமுக துரோக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

சிவகிரி, ஏப். 5:  தென்காசி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து பிரசாரம் செய்த நடிகை சிஆர்.சரஸ்வதி, அதிமுக துரோக கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பேசினார். தென்காசி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாயை ஆதரித்து கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான சிஆர்.சரஸ்வதி வாசுதேவநல்லூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் சசிகலா மற்றும் தினகரன் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். சசிகலா முன்பு தவழ்ந்து முட்டிப்போட்டு முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி, தனது பதவி மற்றும் பணத்தாசைக்காக சசிகலாவிற்கும், கட்சிக்கும் துரோகம் செய்து விட்டார்.
 
ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும், ஜெயலலிதாவை குற்றவாளி என்று கூறிய பாமகவிற்கு ரூ.500 கோடி கொடுத்து தங்கள் கூட்டணியில் இணைத்துள்ளனர். அதிமுக தலைமையிலான இந்த துரோக கூட்டணிக்கு ேதர்தலில் மக்கள் நிச்சயம் சரியான பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதாவின் ஆட்சி நடப்பதாக எடப்பாடியும், ஓபிஎஸ்சும் மக்களை ஏமாற்றுகின்றனர். ஜெயலலிதா ஆட்சி நடந்திருந்தால் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி தமிழர்கள் பலியாகி இருக்க மாட்டார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. எனவே மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர பொன்னுத்தாயை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள், என்றார்.

பிரசாரத்தில் அமமுக ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டியன், நகர செயலாளர்கள் ராஜ் (வாசு), கோபாலகிருஷ்ணன் (சிவகிரி), அணைத்தலை (ராயகிரி), ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், மீனவரணி மாவட்ட செயலாளர் முத்துவேல்சாமி, அமைப்பு சாரா ஓட்டுநரணி மாவட்ட செயலாளர் சிவக்குமார், வழக்கறிஞரணி மாவட்ட துணை செயலாளர்கள் துரைப்பாண்டி, பரமசிவன், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் மணியன், ஜெ பேரவை ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன், இளைஞரணி ஒன்றிய செயலாளர் புவியரசன், அமைப்பு சாரா ஓட்டுநரணி ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன், இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் குமார், மீனவரணி ஒன்றிய செயலாளர் ராமர், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் பிரேமலதா, இளைஞரணி ஒன்றிய துணை தலைவர் நாகராஜன், மேலவை பிரதிநிதி வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : campaign ,coalition ,Deccan Chauvinist ,candidate ,Tenkasi Ammukh ,
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...