×

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு

ஓட்டப்பிடாரம், ஏப்.5: விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் பசுவந்தனை பகுதியில் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் நேற்று ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பகுதிகளான மீனாட்சிபுரம், விட்டிலாபுரம், பசுவந்தனை, நாகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து தனக்கும், தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழிக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

 மீனாட்சிபுரம் பஞ்சாயத்து கே.துரைச்சாமிபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அங்கு நடந்த 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்த பெண்கள் மற்றும் ஆண்களிடம் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். வேட்பாளருடன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட பிரதிநிதிகள் தளவை ராஜா, சத்யராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Vasantham Jayakumar ,
× RELATED விளாத்திகுளம் வட்டாரத்தில் திமுக...