×

அமமுக வேட்பாளர் ஜோதிமணிக்கு அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகம் ஆதரவு

விளாத்திகுளம், ஏப்.5: விளாத்திகுளம் அமமுக வேட்பாளர் டாக்டர் ஜோதிமணிக்கு அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகத்தினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் விளாத்திகுளம் தொகுதியில் உள்ள அனைத்து விஸ்வகர்மா மக்கள் சார்பாகவும் விளாத்திகுளம் தொகுதி அமமுகவுடன் இணைந்து பணியாற்ற அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட துணைச் செயலாளர் பொன்ராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிகழ்வில் விளாத்திகுளம் தொகுதி அமமுக வேட்பாளர் டாக்டர் ஜோதிமணி ஒன்றிய செயலாளர் ரூபம் வேலவன் உட்பட நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதனையடுத்து அமமுக வேட்பாளர் டாக்டர் ஜோதிமணி விளாத்திகுளத்தில் முக்கிய பகுதிகளான காமராஜநகர், எட்டயபுரம் சாலை, மதுரை ரோடு, விளாத்திகுளம் பஜார் பகுதி, காய்கறி சந்தை, வேம்பார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

Tags : Jitimani ,AIADMK ,All India Craftsman Progressive Council ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...