×

மக்களவை, சட்டபேரவை இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் 70 ஆயிரம் பேலட் பேப்பர் அச்சீடு வரும் 8ம் தேதி முதல் பொருத்தும் பணி தொடக்கம்

வேலூர், ஏப்,5:வேலூர் மாவட்டத்தில் மக்களவை மற்றும் சட்டபேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய 70 ஆயிரம் பேலட் பேப்பர் அச்சீடும் பணி சென்னையில் நடந்து வருகிறது.தமிழகம் மற்றும் புதுவையில் 40 மக்களவை தொகுதிகள் 19 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்காக கடந்த மார்ச் 19ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கி 26ம் தேதி முடிந்தது. வேட்பாளர்களின் இறுதி பட்டியல் கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்டு அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரசாரம் சூடுப்பிடித்துள்ளது.இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கு 23 ேவட்பாளர்களும், அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு 16 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அதே போல் ஆம்பூர் சட்டபேரவை இடைத்தேர்தலில் 10 வேட்பாளர்களும், குடியாத்தம் தொகுதியில் 7 வேட்பாளர்களும், சோளிங்கர் தொகுதியிலும் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய பேலட் பேப்பர் அச்சீடும் பணி சென்னையில் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தேவையான பேலட் பேப்பர் இங்கிருந்து அச்சிடப்பட்டு தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் மக்களவை தொகுதிக்கும், குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் ஆகிய சட்டபேரவை இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு என மொத்தம் 70 ஆயிரம் பேலட் பேப்பர் அச்சிடும் பணி சென்னையில் நடந்து வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:வேலூர், அரக்கோணம் ஆகிய மக்களவை தொகுதிக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்படும். சட்டபேரவை இடைத்தேர்தல் நடக்கும் 3 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தலா ஒரு வாக்குப்பதிவு இந்திரம் அமைக்கப்படும். இந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படம், அவரின் சின்னம், பெயர் இடம் பெறும். அதற்கான பேலட் பேப்பர் அச்சிடும் பணி ஒரளவுக்கு முடிந்துள்ளது. இந்த பேலட் பேப்பர் பொருத்தும் பணி வரும் 8ம் தேதி தொடங்குகிறது. இந்த பணியில் பெங்களூரில் உள்ள பெல் நிறுவன பொறியாளர்கள் ஈடுபடுகிறார்கள். அதன்பிறகு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : fraternity constituency ,
× RELATED கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 12 பேர் கைது வேலூர் அருகே கோயில் திருவிழாவில்