வாழப்பாடி, ஏப்.4: வாழப்பாடி ஒன்றிய பகுதிகளில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அமமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்ட பகுதிகளான அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய ஒன்றியங்களில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வேட்பாளர் கோமுகி சரவணனுக்கு, பரிசு பெட்டக சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று வாழப்பாடி பகுதியிலும், நேற்று முன் தினம் 1500க்கும் மேற்பட்டோர் திரண்டு பரிசு பெட்டக சின்னத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தலைமையில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
இதில், வாழப்பாடி நகர செயலாளர் வெங்கடாசலம், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் வீரமுத்து, மாவட்ட அணி செயலாளர்கள் வரதராஜன், முருகேசன், விஜயன், வெங்கடேசன், பிரேம்குமார், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் டிடிவி தினகரனின் ஆசி பெற்ற வேட்பாளராக கோமுகி சரவணனுக்கு ஆதரவாக, பரிசு பெட்டக சின்னத்தை சுவர் விளம்பரங்கள் மூலம் எழுதி வருகின்றனர்.
