×

செம்பனார்கோவில் அருகே மேலையூரில் இலவச வீடு திட்டத்தில் பல லட்சம் மோசடி ஊராட்சி தலைவர், செயலாளர் மீது கலெக்டரிடம் புகார்

நாகை.ஏப்.4: செம்பனார்கோவில் அருகே மேலையூரில் இலவச வீடு திட்டத்தில் பல லட்சம் மோசடி செய்துள்ள ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கலெக்டர் மனு அளித்துள்ளனர். நாகை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் 3.மேலையூர் ஊராட்சி கிராமவாசிகள் சார்பில் நாகை கலெக்டரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் 3. மேலையூர் கிராமத்தில்  ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் பல விதமான ஊழல் செய்து கொள்ளையடித்துள்ளனர்.  கடந்த 5 ஆண்டு காலமாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர்  ஏழைகளுக்கு  கொடுக்க சொன்ன இலவச வீடு திட்டத்தில் தனது உறவினர்களுக்கு 10 பேர் பெயரில் வீடு போட்டு விட்டு அவற்றிற்கு வழங்கப்படும் சிமெண்ட், கம்பிதான் கட்டும் வீட்டிற்கு பயன் படுத்தியுள்ளார். மேலும் இவர் ஊராட்சிக்கு அமரர் ஊர்த்தி வாங்க ரூ.3 லட்சம் பணம் கையாடியுள்ளார். ஆனால் அமரர் ஊர்த்தி வாங்க வில்லை. மேலும்   இவர் 350 குடி நீர் இணைப்பு கொடுத்து விட்டு 20 இணைப்பு மட்டும் கணக்கில் காட்டியுள்ளார். தனி நபர்களால்  பிள்ளையார் கோயில் குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை ஆக்கிரமிப்பு  செய்துள்ளார். இதன் மதிப்பு தற்போது ரூ. 20 லட்சம். மேலும்  ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகே ரூ.25 லட்சம் திப்புள்ள இடமும், பிள்ளையார் கோயில் தென்பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமைத்து டீ கடை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சமாகும்.

Tags : Collector ,Panchayat Chairman ,Mullai ,Sembanarko ,
× RELATED வேலைக்கு வெளிநாடு செல்லும்...