×

குளத்துப்பாளையம் குகைவழிப்பாதை பணிகள் முடியாததால் மக்கள் கடும் அவதி

கரூர், ஏப்.4: குளத்துப்பாளையம் குகைவழிப்பாதை பணிகள் நீண்டநாட்களாக முடியாததால்  இழுப்பதால் பொதுமக்கள்அவதிப்படுகின்றனர். கரூர் -ஈரோடு ரயில்வே இருப்புப்பாதையில் உள்ளது பெரியகுளத்துப்பாளையம்., இந்த பகுதியில் இருந்து கரூர் நகருக்குள் வர குகைவழிப்பாதை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.கடந்த 3ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கான பணிகள் தொடங்கியது. ரூ.6.70கோடி திட்ட மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற்று ரயில்வே பாதையின் கீழ்புறம் உள்ள பகுதியில் பணிகள்நிறைவு பெற்றிருக்கின்றன. ரயில்வே துறையின் பணிகள் முடிவடைந்து ஓராண்டுக்கு மேலாகிறது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சிகள் துறை சார்பில் அணுகுசாலை அமைக்கப்படவேண்டும். இப்பணிகள் இன்னும் பணிகள் துவங்கப்படாத நிலை தொடர்கிறது. எனினும்  அணுகுசாலை அமைக்கும்வேலை இன்னும் துவங்காததால் பணிகள் ஜவ்வாகஇழுத்துக்கொண்டிருக்கிறது,.

 இதுகுறித்து பொதுமக்கள்கூறியது, கரூர் ராமகிருஷ்ணபுரம்-வெங்கமேடு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தினமும் வேலைக்காகவும், கல்வி நிலையங்களுக்கும் இந்த பாதை வழியாகத்தான் வந்து செல்ல வேண்டும். ஆனால் பணிகள் முடியாததால் வெங்கமேடு சென்றும், பைபாஸ்சாலை சென்றும் கரூர் நகருக்குள் வந்து செல்கின்றன. ரயில்வே துறை சார்பில் குகைவழிப்பாதை இருப்புப்பாதையின் கீழ்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் மழைக்காலத்தில் இப்பகுதி தாழ்வாக இருப்பதால் மழைநீர் சேர்ந்து தேங்கிவிடுகின்றன. இரவு நேரத்தில் அவசரமாக செல்லவேண்டியவர்கள் இருப்புப்பாதையை கடந்து செல்லும்போது பலர் அடிபட்டு இறந்துள்ளனர். 7  ஆண்டாக  இந்த குகைவழிப்பாதை திட்டத்தைக்கூட நிறைவேற்ற இயலாத நிலைதான் உள்ளது. மக்கள் தான் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்றனர்.

Tags :
× RELATED அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில்...