×

விஐடி பல்கலைக்கழக தின விழா

சென்னை: விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக தினம் கொண்டாடப்பட்டது. விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் சம்பந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் ஜி.விஸ்வநாதன் பேசியதாவது: விஐடி பல்கலைக்கழகத்திற்கும், அமெரிக்காவிற்கும் அதிக தொடர்பு இருப்பதால் அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து கௌரவப்படுத்தி  உள்ளோம். மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் இந்தியா 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உயர்கல்வி என்பது திறமை உடைய அனைவருக்கும் கிடைக்க கூடியதாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை முன்வைத்து விஐடி செயல்படுகிறது.     இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பர்கெஸ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசும்போது, ‘‘மாணவர்கள் இன்று பெறும் கல்வியானது எதிர்காலத்தில் எத்தகைய சவால்களையும் சந்திக்கும் திறனை தரும்’’ என்றார்.

லைப் செல் நிறுவனத்தின் தலைவர் அப்யா ஸ்ரிஸ்ரிமல் பேசுகையில், ‘‘விஐடி சென்னை வளாகம் பசுமை விருது பெற்றதற்கு பாராட்டுக்கள். தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்திற்கு தனது பங்களிப்பை செய்தல் ஆகிய மூன்றையும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட 23 பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான 977 விருதுகள், பதக்கங்கள், ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மேலும் ககன்தீப் சிங் என்ற மாணவருக்கு சிறந்த சாதனையாளருக்கான ஜி.வி.விருது, ரூ.15 ஆயிரம் ரொக்கம், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags : Vid University Day Festival ,
× RELATED விஐடி பல்கலைக்கழக தின விழா