×

முசிறி கோட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவிற்காக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல யுக்திகள் தேர்தல் அலுவலர்கள் தீவிரம்

தா.பேட்டை, மார்ச் 3:  முசிறியில் தேர்தல் அலுவலர்கள் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி  பொதுமக்கள் மத்தியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர். இதற்காக பல்வேறு  யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.
  முசிறியில் உதவி தேர்தல்  நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் நூறு சதவீத  வாக்குப்பதிவை வலியுறுத்தி சைக்கிள் பேரணி, பொதுமக்கள் மற்றும் வாரச்சந்தை  கூடும் இடங்களில் துணிப்பை விநியோகம், கையெழுத்து இயக்கம், சுவரொட்டிகள்  மற்றும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஆகியவற்றை வழங்கி வாக்குப்பதிவு  நடைபெற முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆர்டிஓ அலுவலகத்தில்  பூங்கா அமைத்து அதில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கு விழிப்புணர்வு  வாசகங்களுடன் பூங்கா அழகுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முசிறி ஆர்டிஓ  அலுவலக வளாகத்தின் முன்பு அலங்கார பல்பு மூலம் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர முசிறி நகரில் இளநீர் கடை தர்பூசணி கடை,  பூக்கடை சிறு வியாபார  நிறுவனங்கள் ஆகிய இடங்களில் 100 சதவீத வாக்களிப்போம்.  வாக்களிப்பது ஜனநாயக கடமை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட  அட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முசிறி உதவி தேர்தல் நடத்தும்  அலுவலர் கூறுகையில், வாக்களிப்பது தகுதி உள்ள அனைவரின் கடமையாகும். அதனை  தங்களது முழு உரிமையாக கருதி வரும் தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற  வேண்டும். இதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற  நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த  பிரசார யுக்தி கிராமப்புற மக்களை விழிப்புணர்வு அடைய செய்துள்ளது. எனவே நாடாளுமன்றத் தேர்தலில் தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

Tags : public ,vote ,Musiri Division ,
× RELATED வாக்கு எண்ணிக்கை நடைபெறும்...