×

அருப்புக்கோட்டையில் பரபரப்பு அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி குடிநீர் விநியோகம்

சாத்தூர்,  ஏப். 3: சாத்தூர் தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சாத்தூர் தொகுதியில் உள்ள கீழராஜகுலராமன், மேலன்மறைநாடு,  மேட்டூர், ராஜாபட்டி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மனுக்கு இரட்டை இலை சின்னத்திலும், தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு கொட்டு முரசு சின்னத்திலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் சாத்தூர் தொகுதியில் வளர்ச்சித் திட்டப்பணிகள் அதிகமாக நடந்துள்ளன. சாத்தூரில் அரசு கலைக்கல்லூரி, வைப்பாற்றில்  13 கோடியில் மேம்பாலம், தாலுகா அலுவலகம் மற்றும்  நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம், வெம்பக்கோட்டைக்கு புதிய தாலுகா  அலுவலகம், புதிய வருவாய் கோட்டம், புதிய ஐடிஐ கல்லூரி, சாலைகள்  விரிவாக்கம், பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்துதல். ரூ.3 கோடியில்  இருக்கன்குடி குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்ததும்  அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்கப்படும். வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர அதிமுக வேட்பாளர் ராஜவர்மனுக்கும், விருதுநகர் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கும் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  
பிரசாரத்தில்  சந்திரபிரபா எம்எல்ஏ, அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்  உட்பட  கூடடணி கட்சி நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tamaraparani ,villages ,Aruppukkottai ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்