×

சித்தையன்கோட்டையில்தான் இந்த அவலம் ஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் பெண்களுக்கு சமூக அக்கறை அதிகமிருக்க வேண்டும்

பழநி, ஏப். 3: பெண்களுக்கு சமூக அக்கறை அதிகமிருக்க வேண்டுமென பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார். பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் 49வது ஆண்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் புவனேஸ்வரி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பழநி கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவிற்கு தலைமை வகித்த பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் பேசியதாவது, பெண்களிடம் நிறைந்த அன்பும், சமூக பொறுப்பும் இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தை நல்ல வழியில் கொண்டு செல்ல முடியும். மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகளை மதித்து நடக்க வேண்டும். மாணவிகள் திருமணத்திற்கு பிறகு சமையலறைக்குள் முடங்கி கிடக்காமல் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். வேலைவாய்ப்பை தேடி அலையாமல் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற வேண்டும். பெற்றோர், முதியவர்களை மதித்து நடக்க பழகி கொள்ள வேண்டும்’ என்றார். தொடர்ந்து விழாவில் ஓய்வுபெற்ற 8 பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் மதிப்பெண் பெற்ற மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பேரவை துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Tags :
× RELATED பழநி-திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில்...