தளிகையூரில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி முகாம்

பாபநாசம், ஏப். 3: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே தியாக சமுத்திரம் ஊராட்சியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி பிடாரி அம்மன் கோயில் வளாகம், தளிகையூர், நரசிம்மபுரம், புள்ள பூதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 800 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் சுவாமிமலை அடுத்த அலவந்திபுரம் ஊராட்சியில் ஊராட்சி வளாகம், கெங்காதரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கபிஸ்தலம் கால்நடை உதவி மருத்துவர் வடிவேலன், 1,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டார். கும்பகோணம் உதவி இயக்குனர் ரமேஷ் பங்கேற்றார்.

Related Stories:

>