×

நாளை தஞ்சாவூரில் நான் முதல்வன் திட்ட கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி: தஞ்சாவூர் கலெக்டர் தகவல்

தஞ்சாவூர், மே 10: தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்ச் 2024ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை (11.5.2024) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தஞ்சாவூர், தீர்க்க சுமங்கலி மஹாலில் நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவம், வேளாண்மை, பொறியியல், மீன்வளத்துறை, கலை மற்றும் அறிவியல் மற்றும் இதர பாடப் பிரிவுகள் குறித்து துறை வல்லுநர்கள் மூலம் உயர்கல்வி பயில்வதற்கான வழிமுறைகள், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான வருவாய் துறை அலுவலர்களின் ஆலோசனைகள், வங்கிமேலாளர்கள் வழியே கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தனிநபர் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படஉள்ளது.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரிகளில் பயிற்று விக்கப்படும் பாடப்பிரிவுகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக கல்லுாரிகளின் அரங்கங்கள் மற்றும் வழிகாட்டிகையேடுகள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post நாளை தஞ்சாவூரில் நான் முதல்வன் திட்ட கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி: தஞ்சாவூர் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Nan Mulvan ,Tamil Nadu government ,Deepak Jacob ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 32,258 மாணவர்கள் பயன்