×

காரைக்கால் பகுதி சோதனைச் சாவடிகளில் புதுச்சேரி டிஜிபி சுந்தரி நந்தா ஆய்வு

காரைக்கால், ஏப்.3: மக்களவை தேர்தலையொட்டி, காரைக்கால் சோதனைச் சாவடிகளில் புதுச்சேரி டி.ஜி.பி சுந்தரி நந்தா நேற்று மாலை ஆய்வு செய்தார். நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, மாவட்ட தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல்துறை மாவட்ட எல்லைகள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

மாவட்ட காவல்துறையின் பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, புதுச்சேரி டி.ஜி.பி சுந்தரி நந்தா நேற்று மாலை காரைக்கால் வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா, எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால், எஸ்.பிக்கள் மாரிமுத்து, வீரவல்பவன் மற்றும் பலர் வரவேற்றனர். பின்னர், காரைக்கால் மாவட்ட அம்பகரத்தூர், நல்லாதூர், நண்டலாறு, மேலவாஞ்சூர் உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளையும், அங்கு பணியாற்றும் போலீசாரின் பணியையும் ஆய்வு செய்தார்.Tags : Puducherry ,DGP Sundari Nanda ,area checkpoints ,Karaikal ,
× RELATED நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை என அறிவிப்பு !