×

சிவிஜில் செயலி விழிப்புணர்வு முகாம்

அரியலூர், மார்ச் 29:  அரியலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரில் சிவிஜில் செயலி விழிப்புணர்வு முகாம் நடந்தது.நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் மீறால் தொடர்பாக பறக்கும் படை, கண்காணிப்பு குழு அமைத்து ஆங்காங்கே தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தடுப்பது கண்காணிக்கப்படுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதியை மீறும் நடவடிக்கைகளை பொதுமக்களும் கண்காணித்து தேர்தல் நடத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆன்லைன் மூலம் போட்டோ அல்லது வீடியோ எடுத்து அனுப்ப சிவிஜில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் செயலியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் அனுப்பும் பொதுமக்கள் தங்களை பற்றி விபரங்களை தெரிவிக்காமல் தங்களது தொலைபேசி எண்ணை செயலியில் பதிவிட்டு புகார் அளிக்கதக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுமக்களால் அனுப்பப்படும் புகார் சிவிஜில் மூலமாக பெறப்பட்டவுடன் உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலர், பறக்கும்படை அல்லது கண்காணிப்பு குழுவிற்கு அனுப்பி புகாரின் மீது 100 வினாடிகளில் நடவடிக்கை எடுத்து புகார் அளித்த பொதுமக்களுக்கு புகாரின் முடிவை தெரிவிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு சிவிஜில் செயலி விழிப்புணர்வு முகாம் நடந்தது. கூட்டுறவு சங்களின் இணை பதிவாளர் கோமதி தலைமை வகித்தார். துணை பதிவாளர் செல்வராஜ், கல்லூரி முதல்வர் கண்ணன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags : CVG Processor Awareness Camp ,
× RELATED மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு...