×

முதுமலை வன எல்லைகளில் காட்டுத் தீ தடுக்க எச்சரிக்கை பலகைகள்

கூடலூர்,மார்ச் 29: முதுமலை வன எல்லைகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கும் வகையில் காட்டுத் தீ தடுப்பு  எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வனப்பகுதிகளில் புல்வெளிகள் காய்ந்த நிலையில் உள்ளதால் காட்டுத் தீ ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெயில் சுட்டெரிக்க துவங்கியதால் பிப்ரவரி மாதத்தில் பல இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது. முதுமலை மசினகுடி பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில்  நூற்றுக்கணக்கான  ஏக்கரில் காட்டுத்தீ பரவியது.  பல நாட்கள் போராட்டத்திற்கு பின் கட்டுப்படுத்தப்பட்டது.  இந்த நிலையில் தற்போது மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் அனல் காற்று வீசி வருகிறது. கடந்த பல வருடங்களில் இல்லாத அளவு இந்த வருடம் கடுமையான வெப்பம் நிலவுவதால் வனப்பகுதிகளில் காட்டு தீ பரவாமல் தடுக்க, வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.  முதுமலை வன எல்லைகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கும் வகையில் காட்டுத் தீ தடுப்பு  எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளன.இதேபோல் வனப்பகுதிகளில் தீமூட்டுபவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : forest fires ,Mudumalai Forest Range ,
× RELATED தேனாடு கிராமத்தில் காட்டுமாடுகள் நடமாட்டம் விவசாயிகள் அச்சம்