×

மணப்பாறையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர் ஜோதி ஓட்டம்

மணப்பாறை, மார்ச் 28:  மணப்பாறையில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணவை மாரத்தான், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவு தடகளக்குழு, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் தொடர் ஜோதி ஓட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பேருந்து நிலையம் பெரியார் சிலை திடலில் இருந்து தொடர் ஓட்டத்தை மருங்காபுரி வருவாய் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேலு  ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர் ஜோதி ஓட்டம், புதுத்தெரு, கச்சேரி சாலை, ராஜவீதி, விராலிமலை சாலை, மாவட்ட பொது மருத்துவமனை, பாரதியார் நகர், பழைய காலனி, கோவில்பட்டி சாலை வழியாக 11 கிமீட்டர் சென்று மீண்டும் பெரியார் சிலை திடலில் நிறைவுபெற்றது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், வருவாய்துறையினர், காவல்துறையினர், மாணவ மாணவியர்கள், தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Jyothi ,
× RELATED லாரி மோதி வாலிபர் பலி