×

மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள கூட்டணி அமோக வெற்றி பெறும் சிதம்பரம் பேச்சு

பொன்னமராவதி, மார்ச் 28: பொன்னமராவதியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.திருமயம் எம்எல்ஏ ரகுபதி தலைமை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் ராம.சுப்புராம், புஷ்பராஜ், ஆலவயல் சுப்பையா, முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள கூட்டணி அமோக வெற்றி பெறும். கடந்த 5 ஆண்டுகள் நடந்த ஆட்சி பாஜ ஆட்சியல்ல, மோடி என்ற தனிமனித ஆட்சி. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் இதுபோன்று இருந்ததில்லை. தமிழ்நாட்டு மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்று இந்தியாவே உற்று நோக்குகிறது. ராகுல்காந்தி பிரதமரானவுடன் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார். இதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார். முன்னதாக திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி வரவேற்றார். முடிவில் வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags : Chidambaram ,successor ,MK Stalin ,
× RELATED பிரதமர் மோடியின் பிரித்தாளும்...