×

திண்டுக்கல் நாகல்நகரில் கால்நடைகள் கட்டும் இடமான காய்கறி சந்தை பொதுமக்கள் முகம்சுளிப்பு

திண்டுக்கல், மார்ச் 28: திண்டுக்கல் நாகல்நகர் வாரச்சந்தை கால்நடைகள் கட்டும் இடமாக மாறி வருவதால் பொதுமக்கள் முகம்சுளித்து வருகின்றனர். திண்டுக்கல் நாகல்நகர் சந்தையில் வாரந்தோறும் திங்கள்கிழமை சந்தை நடக்கிறது. ஆதிகாலம் தொட்டு நடந்து வரும் இச்சந்தையில் மாநகராட்சி சார்பில் 50க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல கடைகள் பயன்பாடின்றியே கிடக்கிறது. இந்த காலியிடங்களில் தனியார் சிலர் மாடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். மாடுகளின் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாரந்தோறும் மார்க்கெட்டிற்கு வருபவர்கள் முகம்சுளித்து செல்கின்றனர்.

இதுகுறித்து சந்தை வியாபாரிகள் கூறுகையில், ‘திண்டுக்கல் மாநகராட்சி கூடுதல் கட்டண வசூலுக்கு சந்தையை ஏலம் விட்டுள்ளது. இதனால் பல கடைகள் பணம் தர முடியாமல் காலியாக கிடக்கின்றன. இந்த இடங்களில் மாடுகளை கட்டி தொழுவமாக மாற்றி விட்டனர். இதனால் வழக்கமான சந்தையை நடத்த முடியாமல் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மாநகராட்சி ஏலத்தொகையை குறைத்து வியாபாரிகளுக்கு குறைந்த கட்டண வசூலுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Dindigul Nagalnagar ,
× RELATED திண்டுக்கல் நாகல் நகரில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்