×

கம்பம் பகுதிகளில் கட்டிடப்பணிகள் மீண்டும் ஜரூர்

கம்பம், மார்ச் 28: கம்பம் பகுதியில் கட்டிடவேலைகள் அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கம்பம் பகுதிகளில் வெப்பம் அதிகளவில் கொளுத்தி வருகிறது. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் புதிய காம்ப்ளக்ஸ், வீடுகள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. பெரிய கான்ட்ராக்ட்நிறுவனங்கள், கான்ட்ராக்ட்காரர்கள் கட்டிடப்பணிகளில் வேலைசெய்கின்றனர். நகரங்களில் கட்டிடதொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் கோடைக்காலம் தொடங்கும் முன்பே தேனிமாவட்டத்தில் உள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், போடி பகுதிகளில் முகாமிடும் காண்ட்ராக்ட் ஏஜெண்டுகள் கூலித்தொழிலாளர்களை அட்வான்ஸ் தொகை கொடுத்து அழைத்து செல்கின்றனர். சித்தாள், நிமிந்தாள், கொத்தனார் என அதிக சம்பளம் கொடுப்பதுடன் உணவும், இருப்பிடமும் தருகின்றனர். இதனால் தற்போது அதிகளவில் நகரங்களை நோக்கி கட்டிட தொழிலாளர்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

கம்பம் பகுதிகளிலும் கட்டிடவேலைகள் அதிகளவில் தற்போது நடைபெறுகிறது. வெளிநகரங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள்  வாரத்தில் விடுமுறை, பெரியகாண்ட்ராக்ட் என்றால் போனஸ் என அனைத்து வசதிகளையும் செய்து தரும் நிலை உள்ளது. இதனால் உள்ளூரில் நடக்கும் வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. கட்டிடப்பணிகளின் வேலை ஜரூராக நடக்கிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், `` கம்பம் பகுதிகளில் கட்டிட வேலைகள் அதிகளவில் நடக்கிறது. இதேபோல் வெளிநகரங்களுக்கும் இங்கிருந்து தொழிலாளர்கள் செல்கின்றனர். விவசாய வேலைகளுக்கு நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆனால் கட்டிட வேலைகளுக்கு எத்தனை இயந்திரங்கள் வந்தாலும் ஆட்கள் வேலை செய்யாமல் முழுமை பெறாது. எனவே, கட்டிடவேலைகளுக்கு  தொழிலாளர்கள் அதிகளவில் தேவைப்படுவதால் தேனி மாவட்டத்தில் இருந்து அதிகளவில் செல்லும் நிலை உள்ளது. கோடை வந்துவிட்டால் வேலைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பெருநகரங்களில் தேவைப்படுகின்றனர்’’ எனக் கூறினர்.

Tags : Resorts ,pole areas ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...