×

சடலங்களை எரிப்பதால் கொல்லிமலை வனத்தில் தீ பரவும் அபாயம்

சேந்தமங்கலம், மார்ச் 28:       சேந்தமங்கலம் அடுத்துள்ள பேளுக்குறிச்சியில், நரசிம்மன்காடு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்யவும், எரியூட்டவும், கணவாய்மேடு வளைவு பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதியிலுள்ள மயானத்தை  பயன்படுத்தாமல், சிலர் அருகில் உள்ள கொல்லிமலை அடிவார வனத்துக்குள் சென்று பிணங்களை புதைப்பதும், எரியூட்டுவதையும், வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது, கடுமையான வெயில் கொளுத்துவதாலும், சடலத்தை எடுத்துச்செல்லும் போது பட்டாசு வெடிப்பதாலும், எரியூட்டுவதாலும்  தீப்பொறி பட்டு தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘மயானம் இருக்கும் போது ஒருசிலர் வேண்டுமென்று வனத்துக்குள் சென்று சடலத்தை அடக்கம் செய்கின்றனர். எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : forest ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...