×

காஞ்சிபுரம், பெரும்புதூர் தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

காஞ்சிபுரம், மார்ச் 28: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்களவை, சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் (தனி), பெரும்புதூர் மக்களவை தொகுதிகளுக்கு நாடாளுமன்ற பொதுத்தேர்தலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டு காலியாக உள்ள திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் பணப்பட்டுவாடா, பரிசு பொருள்கள் வழங்குவதை தடுக்கும் நோக்கத்துடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம், பெரும்புதூர், திருப்போரூர் தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா, அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2019 மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் காஞ்சிபுரம், பெரும்புதூர் மக்களவைத் தொகுதிகள், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் செங்கல்பட்டு,  திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர்,  காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகள் அடங்கும். இதற்கான தேர்தல் பொது பார்வையாளராக யோகேஷ்மகசி (கைபேசி எண்: 9499973041), காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர், செங்கல்பட்டு, செய்யூர் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக  பூபேந்தரசிங் ஆனந்த் (கைபேசி எண் 9499973027), காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக சுஜித்குமார் பி.சம்பூர் (கைபேசி எண் 9499973016), காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் காவல் பார்வையாளராக சிவகுமார்வர்மா  (கைபேசி எண் 9499973045) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆலந்தூர், பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகள் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் திருவள்ளூர் மாவட்டத்திலும் இடம் பெற்றுள்ளன. பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொது பார்வையாளராக டெபசிஸ்தாஸ்  (கைபேசி எண் 9499973018), தாம்பரம், பல்லாவரம், பெரும்புதூர் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக  அமீஷ்அகர்வால் (கைபேசி எண் 9499973023), ஆலந்தூர், மதுரவாயல். அம்பத்தூர் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக அர்ஜூன்லால் லத் (கைபேசி எண் 9499973014), பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் காவல் பார்வையாளராக சிவகுமார் வர்மா (கைபேசி எண் 9499973045) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு பொது பார்வையாளராக மஜூனூர் ஹூசைன் (கைபேசி எண் 9499973029) தேர்தல் செலவின பார்வையாளராக  பூபேந்தர சிங் ஆனந்த், (கைபேசி எண் 9499973027), தேர்தல் காவல் பார்வையாளராக சிவகுமார் வர்மா (கைபேசி எண் 9499973045) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Tags : perumbuthur constituencies ,Kanchipuram ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...