×

திமுக வெற்றிக்கு தீவிரமாக பாடுபட வேண்டும் தொமுச பேரவை கூட்டத்தில் முடிவு

தூத்துக்குடி, மார்ச் 28: தூத்துக்குடியில் நடந்த தொ.மு.ச.பேரவை செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றிக்கு தொழிலாளர்கள் அனைவரிடம் ஆதரவு திரட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிர சாரத்திற்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக மாவட்ட தொ.மு.ச.பேரவை செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தொ.மு.ச.பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். பஞ்சாலை தொழிலாளர் மற்றும் தன்பாடு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் ஜெகன் பெரியசாமி வரவேற்றார். வடக்குமாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேட்பாளர் கனிமொழி, தொ.மு.ச.பேரவை பொருளாளர் நடராஜன், நிர்வாகிகள் வேலுச்சாமி, தர்மன், தனசேகரன் ஆகியோர் பேசினர். மாவட்ட கவுன்சில் நிர்வாகிகள் முருகன், சுசீ.ரவீந்திரன், குழந்தைவேல், ராஜாமணி, செல்வபெருமாள், போக்குவரத்துக்கழக தொ.மு.ச.நிர்வாகிகள் என்.எஸ்.பிள்ளை, சேசுதாஸ், கருப்பசாமி, ராமசாமி, மரியதாஸ், இளங்கோ, சந்திரசேகர், விஜயகுமார், முருகன், கூட்டுறவு நியாயவிலைக்கடை தொ.மு.ச. மாவட்ட செயலாளர் வேல்முருகன், சண்முகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,meeting ,Episcopal Conference ,
× RELATED மாதவரம் வடக்கு பகுதி திமுக ஆலோசனை கூட்டம்