×

பள்ளிபாளையத்தில் பாமகவினர் திமுகவில் இணைந்தனர்

பள்ளிபாளையம், மார்ச் 27: பாட்டாளி மக்கள் கட்சியின் பள்ளிபாளையம் ஒன்றிய முன்னாள் செயலாளர் சக்கரவர்த்தி, முன்னாள் நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பாமகவிலிருந்து விலகினர்.
தொடர்ந்து, அவர்கள் தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் திமுக மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த பாமகவினருக்கு துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், ஆலாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் கதிர்வேல் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Tags : Palaipalayam ,Pallavas ,DMK ,
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்