×

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

சத்தியமங்கலம், மார்ச் 27:   சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுர் பிரிவு கரியகாளியம்மன் கோயில் அருகே பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் புங்கார் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பழைய பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.இந்த ஆலைக்கு வெளியே பிளாஸ்டிக் சாக்கு குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் பிளாஸ்டிக் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வாகனம் சிக்கரசம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடிசை தீப்பிடித்து எரிந்ததால் அங்கு தீயை அணைத்துவிட்டு இப் பகுதிக்கு வர தாமதம் ஆனது.இதனால், அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு தீ பரவும் அபாயம் ஏற்படும் என கருதி  50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில்   ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். இதற்கிடையே, சத்தியமங்கலம் தீயணைப்பு வாகனம் மற்றும் பண்ணாரி அம்மன் திருவிழா பாதுகாப்பிற்காக வந்த வாகனம் என 2 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைக்கப்பட்டது.இந்த தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழுதடைந்த மினி டெம்போ எரிந்து நாசமானது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Fire accident ,
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...