×

திருமணம் ஆசைகாட்டி ஏமாற்றியவர் கைது

மேலூர், மார்ச் 27: திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவு கொண்டு ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர். கொட்டாம்பட்டி அருகில் உள்ள மணப்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா(22, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் கோட்டப்பட்டியை சேர்ந்த சுந்தரம் மகன் அழகுராஜா(27). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். சங்கீதாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் அழகுராஜா உறவு பாலியல் வைத்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் ஊர் திரும்பி உள்ளார். மீண்டும் அவரை சந்தித்து திருமணம் செய்துகொள்ள சொல்லி சங்கீதா வற்புறுத்தியதையடுத்து, அழகுராஜாவின் தாயார் அமராவதி இவரை அடித்து விரட்டி உள்ளார். இது குறித்து சங்கீதா போலீசில் புகார் செய்தார். அழகுராஜா மற்றும் அவரது தாயார் அமராவதி மீது வழக்கு பதிவு செய்த கொட்டாம்பட்டி போலீசார் அழகுராஜாவை கைது செய்தனர்.

Tags : conspirator ,
× RELATED தமிழகம், கேரளாவில் தாக்குதல் நடத்த சதி...