×

குடும்ப பிரச்னையில் மாறிமாறி கத்திக்குத்து மாமனார் உயிரிழப்பு மருமகன் படுகாயம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 27: ஒட்டன்சத்திரம் அருகே அரசப்பிள்ளைப்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன் (65). விவசாயி. இவர் தனது மகளை அதே ஊரை சேர்ந்த வேலுச்சாமி (49) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இத்தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் கடந்த 3 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கலைச்செல்வி அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே டூவீலரில் வந்த வேலுச்சாமி மனைவி கலைச்செல்வி மீது வாகனத்தை மோத செய்தார். இதில் கீழே விழுந்த கலைச்செல்வி இதுகுறித்து தந்தை கருப்பணனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே கருப்பணன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து கொண்டு அங்கு சென்று வேலுச்சாமியை குத்தியுள்ளார். பதிலுக்கு வேலுச்சாமி, அந்த கத்தியை பிடுங்கி கருப்பணனை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீ்ட்டு ஒட்டன்சத்திரம் ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கருப்பணன் உயிரிழந்தார். வேலுச்சாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : death son-in-law ,
× RELATED வளர் இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு