×

பொன்னமராவதியில் மாதிரி வாக்குச்சாவடி அமைத்து விழிப்புணர்வு

பொன்னமராவதி,மார்ச்27: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வரும் ஏப்ரல் 18ல் நடைபெற உள்ள மக்களை தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ள அனைவரையும் வாக்களிக்க செய்யும்  நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. தேர்தல் நடைபெறும் வரை இந்த மாதிரி வாக்குச்சாவடி மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் பங்குபெற்றனர்.

Tags : Ponnaravarai ,
× RELATED பொன்னமராவதி அருகே ஏனமாரியம்மன் கோயிலில் பால்குட விழா