×

எட்டயபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி

எட்டயபுரம், மார்ச் 27: எட்டயபுரத்தில் நூறுசதவீத வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பின் அவசியம் குறித்து பள்ளி மாணவர்களின் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடந்தது.சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் பள்ளி மாணவர்கள் 100 சதவீத வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பின் அவசியம் குறித்து ஸ்கேட்டிங் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் தலைவர் முருகன் தலைமை வகித்தார். துணை தலைவர் தேவா முன்னிலை வகித்தார். நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் தங்கமாரியப்பன் வாழ்த்துரை வழங்கினார். பேரணியை எட்டயபுரம் தாசில்தார் வதனாள் துவக்கி வைத்தார்.

எட்டயபுரம் பால்பண்ணையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக பாரதி மண்டபம் வரை சென்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் ஸ்கேட்டிங் சிலம்பாட்டத்துடன் பேரணியாக சென்று நூறுசதவீத வாக்குப்பதிவு மற்றும் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் பொருளாளர் யுவராஜன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் மகேஷ்வரன் நன்றி கூறினார்.  


Tags : Ettayapuram ,
× RELATED கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில்...