×

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக, மக்கள் நீதிமய்யம் கட்சியினர் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி, மார்ச் 27:தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கடைசிநாளான நேற்று அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப்நந்தூரியிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட செயலாளர்கள் தெற்கு ஹென்றிதாமஸ், வடக்கு சுந்தரராஜ், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் பாலன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் கோசல்ராம், மாநில சிறுபான்மை அணி தலைவர் லெனின், மாநில அமைப்புச்சாரா ஓட்டுரணி துணை செயலாளர் பெரியசாமி, மாநில ஜெயபேரவை இணை செயலாளர் ஆனந்தராஜ், மாநில மீனவரணி இணை செயலாளர் சுகந்தி கோமஸ், ஒன்றிய செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், முருகன், பொன்ராஜ், சேக்தாவூது, அம்மன் நாராயணன், திவாகர், பகுதி செயலாளர்கள் எட்வின்பாண்டியன், ஆறுமுகம், கோட்டாளமுத்து அசோக்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணிகிரேஸி, இணை செயலாளர் விஜயலெட்சுமி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சிவதுரையரசன், துணை தலைவர் சண்முககுமாரி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன், துணை அமைப்பாளர் ரூஸ்வெல்ட்ஜெபராஜ், மாணவரணி செயலாளர் நம்பிராஜன், சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் ஸ்டீபன், இளைஞரணி கார்த்திக்ராஜா மற்றும் ரமேஷ்கிருஷ்ணன், காசிலிங்கம், எஸ்.டி.பி.ஐ.கட்சி மாவட்ட தலைவர் காதர்மைதீன் பங்கேற்றனர்.மக்கள் நீதிமய்யம் சார்பில் டி.பி.எஸ்.பொன்குமரன் தேர்தல் அதிகாரி சந்தீப்நந்தூரியிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் தொகுதி பொறுப்பாளர்கள் ஜவஹர், ரமேஷ், கதிரவன், யோகேஸ், ரெங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சி தவைருமான கவுதமன் மனு தாக்கல் செய்தார். அவருடன் தென்னவன், இளையவன், அனிதா, கிங்ஸ்லி, உமர், அமீர் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tuticorin ,constituency ,Ammukh ,People's Justice Party ,
× RELATED தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல்...