×

ஆம்வேயின் ஈட் ஹார்ட் ஈட் ஸ்மார்ட் பிரச்சார செயல்திட்டம்

கோவை,மார்ச் 26: ஆம்வே இந்தியா நிறுவனம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சமச்சீர் ஊட்டச்சத்து உட்கொள்வதன் பலன்களை விளம்பரபடுத்தி ஆதரிக்கும் வகையில் ‘ஈட் ஹார்ட் ஈட் ஸ்மார்ட்’ பிரச்சார செயல்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரச்சார செயல்திட்டத்தை  அறிமுகம் செய்து வைத்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை சந்தையாக்கல் அலுவலர்.சுந்திப்ஷா, சரியான போதுமான அளவிலான ஊட்டச்சத்து என்ற கருத்தாக்கத்தின்படி இந்த திட்டம் அமைந்துள்ளது.சம நிலையற்றதாக இருக்கும் சாத்தியமுள்ள வழக்கமான உணவு முறை காரணமாக ஏற்படும் ஊட்டச்சத்து இடைவெளிகளை நிரப்புவதன் மீது நோக்கம் கொண்டுள்ளது.

 உடலின் தினசரி ஊட்டச்சத்து தேவைப்பாட்டில் ஏற்படும் குறைபாடுகளை,முறையாக துணை உணவுகளின் வழியாக பெறலாம்.கடந்த சில ஆண்டுகளாக மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் காரணமாக ஊட்டச்சத்து இடைவெளியானது மேலும் விரிவடைந்துள்ளது. இது மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வின் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே மேம்பட்ட வாழ்க்கையுடன் மக்களுக்கு உதவும் வகையில் பொருத்தமான ஊட்டச்சத்து உட்கொள்ளுதல் குறித்த இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் அறிமுகம் செய்யபட்டுள்ளது.  மேலும் இந்தியாவில் நியூட்ரில்லைட் பிரிவின் பிராண்ட் தூதராக ஃபர்ஹான் அக்தரை ஒப்பந்தம் செய்துள்ளது என்றார்.

Tags : Amway ,
× RELATED ஆம்வே இந்தியா சார்பில் சியாவன்பிராஷ் அறிமுகம்