பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

செங்கல்பட்டு, மார்ச் 22: காஞ்சிபுரம் பெரிய கேலண்டர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (23). கல்லுாரி முடித்து விட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்தார். இவரது, தாய் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மணிகண்டன், மருத்துவமனையில் உள்ள தாயை பார்க்க செங்கல்பட்டுக்கு பைக்கில் சென்றார். பின்னர் காஞ்சிபுரம் புறப்பட்டார். பழைய சீவரம் அருகே சென்ற போது, காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இடதில், தூக்கி வீசப்பட்ட மணிகண்டன், அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து பாலூா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>