தாரமங்கலத்தில் ₹1.8 லட்சம் பறிமுதல்

தாரமங்கலம், மார்ச் 21:  தாரமங்கலம் அருகே கே.ஆர் தோப்பூர் பவர் கேட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரவிசந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த காரை சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணம் இன்றி ₹1.8 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்ததில், அவர் பெயர் சிவராஜ் என்பதும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர் உறவினர் திருமணத்திற்கு சீர் செய்ய பணம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்து சேலம் துணை தாசில்தார் தரனிடம் பறக்கும் படை அதிகாரி ஒப்படைத்தனர்.

Related Stories: