×

பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு நிறைவு மாணவர்கள் கொண்டாட்டம்

கோவை, மார்ச் 20: பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. இதில், நேற்று உயிரியியல், தாவரவியல், வரலாறு, பிசினஸ் கணிதம், அலுவலக மேலாண்மை, அக்கவுண்டன்சி மற்றும் ஆடிட்டிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இத்தேர்வினை, 15 ஆயிரத்து482 பேர் எழுத இருந்தனர். இதில், 14 ஆயிரத்து 480 பேர் தேர்வு எழுதினர். 1,002 பேர் தேர்வு எழுதவில்லை. உயிரியல் மற்றும் தாவரவியல் பாட தேர்வு சற்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். பிளஸ்2 தேர்வு நிறைவடைந்தை தொடர்ந்து, மாணவர்கள் உற்சாகமடைந்தனர். தேர்வு முடிந்தவுடன், மாணவிகள் செல்பி, குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிளஸ்2 மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் முதல் துவங்குகிறது. கோவை மாவட்டத்தில் மூன்று மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி வெளியிடப்படுகிறது.

Tags : examination ,students celebration ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்