×

ரவுடி வெட்டிக்கொலை: தடுத்த தாய்க்கும் வெட்டு விழுந்தது

ஆலந்தூர்: மூவரசம்பட்டு, சபாபதி நகர், 2வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (29). இவர் மீது பழவந்தாங்கல், பல்லாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, அடிதடி, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. பழவந்தாங்கல் காவல் நிலைய வழக்கு சம்மந்தமாக, ஆலந்தூர் கோர்ட்டில் நேற்று ஆஜராகிவிட்டு, வீடு திரும்பிய ராமச்சந்திரன், தாய் சுந்தரியிடம் பேசிக் கொண்டிருந்ததார்.  அப்போது, வீட்டில் புகுந்த 5 பேர், ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் இறந்தார். மகனை காப்பாற்ற முயன்ற சுந்தரிக்கும் வெட்டு விழுந்தது. தகவலறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார், ராமச்சந்திரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது தாயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ராமச்சந்திரனுக்கும், பழவந்தாங்கலை சேர்ந்த வசந்தகுமாருக்கும், முன்விரோத தகராறு இருந்ததால், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராமச்சந்திரனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். …

The post ரவுடி வெட்டிக்கொலை: தடுத்த தாய்க்கும் வெட்டு விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Ramachandran ,2nd Street ,Alandur ,Movarasampathi ,Sabathi Nagar ,Roudy Incarnate ,
× RELATED சாலையில் கிடந்த பணத்தை காவல்...