×

கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கும் அவலம் கல்லாங்காடு மேற்குதெருவில் பாதாள சாக்கடை அமைக்க கோரிக்கை

திருச்சி, மார்ச் 12: திருச்சி வண்ணாரப்பேட்டை அருகே கல்லாங்காடு மேற்குதெரு பகுதி தாழ்வான பகுதி காரணமாக சாலையில குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் அபாயத்தில் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருச்சி வண்ணாரப்பேட்டை அருகே கல்லாங்காடு மேற்குதெரு பகுதி உள்ளது. இங்கு போடப்பட்டுள்ள சாலை மற்ற பகுதிகளை விட தாழ்வாக உள்ளது. அந்த சாலையின் அளவை வைத்து வடிகால் வாய்க்கால்கள் உள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு இல்லாததால் அப்பகுதியினர் வடிகால் வாய்க்கால் மூலம் சாக்கடை கழிநீரை வெளியேற்றுகின்றனர். இது தவிர பக்கத்து தெருவில் இருந்தும் வரும் கழிவுநீர்இந்த வடிகால் வாய்க்கால் வழியாகத்தான் வெளியேறுகிறுது. ஆனால் மற்ற பகுதிகளை விட கல்லாங்காடு மேற்குபகுதி தாழ்வாாக இருப்பதால் சாக்கடை கழிவுநீர் வாடிகால் வாய்க்காலிலிருந்து வெளியேறி சாலைமுழுவதும் நிரம்பி குளம்போல் தேங்கிவிடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் முடியாமல், வாகனங்களை இயக்கவும் முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.  

கடந்த வருடம் ஜூலை மாதம் அப்பகுதியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தபோது விரைவில்  பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார். மேலும் நடந்து செல்ல ஒற்றையடி பாதைபோல் சாலையில் நிரம்பிய தண்ணீரின் நடுவே கற்கள் போடப்பட்டது. அதன்பிறகு இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இது தொடர்பாக கடந்த மாதம் 11ம் தேதி கலெக்டரிடமும் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அங்கு தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் புகார் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு சென்றனர். கல்லாங்காடு மேற்குபகுதி மக்களுக்கு உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி அவர்கள் இன்னல்களை போக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sewage road ,Kallangadu ,west ,
× RELATED பழைய தொகுதியை மாற்றியதால் மேற்கு வங்க பாஜவில் அதிருப்தி